திண்டிவனம் அருகே பொதுக் கிணறு தனி நபரால் ஆக்கிரமிப்பு,பொதுமக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கடவபாக்கத்தில் பொதுக் கிணற்றை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2021-08-30 12:39 GMT

திண்டிவனம் அருகே பிரச்சனைக்குரிய பொதுக் கிணறு

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட கடவம்பாக்கம் கிராமத்தில் ஏரி அருகே அரசு புறம்போக்கு இடத்தில் அரசு செலவில் கடந்த 2015 ஆண்டு ரூ.6 லட்சத்து,77 ஆயிரத்து 500 மதிப்பில் குடிநீர் கிணறு வெட்டப்பட்டது.

கிணறு வெட்டும்  வரை எந்த பிரச்சனையும் செய்யாமல் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் மகன் மணி என்பவர், கிணறு வெட்டும் பணி முடிந்தவுடன் அந்த கிணற்றை ஆக்கிரமித்து வைத்து கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் கிடைக்கவிடாமல் செய்து வருகிறார்.

தற்போது அந்த பொது கிணற்றில் தண்ணீர் இருந்தும் தனிநபர் அடாவடிதனத்தால் தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் கிணறும் பாழடைந்து வருகிறது.

இதனை எதிர்த்து பொதுக்கிணற்றை மீட்டு கொடுக்க அக்கிராம பொதுமக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தனிநபரிடம் இருந்து அந்த கிணற்றை மக்கள் பயன்பாட்டிற்கு மீட்டுத்தர வலியுறுத்தி ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுத்தனர்.

விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெட்டப்பட்ட கிணற்றை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்து குடி தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News