திண்டிவனம் பகுதியில் நகையுடன் சுற்றி திரிந்த மூதாட்டியால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் இன்று நகையுடன் சுற்றித் திரிந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் பகுதியில் நகையுடன் சுற்றித்திரிந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் ரோசனை பகுதியில் ஒரு பெண் கழுத்தில் நகைகள் அணிந்து கொண்டு சுற்றி திரிவதாக ரோசனை இன்ஸ்பெக்டர் பிருந்தாவுக்கு தகவல் வந்தது.இதை தொடர்ந்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் அந்த மூதாட்டிடம் விசாரித்தார்.அந்த மூதாட்டி மனத் தெளிவு இல்லாததால் பெயரை மாற்றி மாற்றி கூறினார்.
இதனால் இன்ஸ்பெக்டர் பிருந்தா சமூக வலைதள உதவி மற்றும் பல்வேறு இடங்களில் விசாரித்ததில் காட்டுச்சிவிரியை சேர்ந்த புஷ்பவதி என்பது தெரியவந்தது.அவரை அங்கிருந்து காட்டுச்சிவிரிக்கு அழைத்துச் சென்று,அவர்களது உறவினர்களிடம் ஒப்படைத்தார். அந்த பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.இரவில் மூதாட்டி நகை அணிந்து கொண்டு சுற்றி திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.