திண்டிவனத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காய்கறி மார்க்கெட் அருகே விநாயகர் சிலை வைக்க மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு;

Update: 2022-08-31 13:45 GMT

பைல் படம்

திண்டிவனத்தில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்ததால் பரபரப்பு
  • whatsapp icon

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காய்கறி மார்க்கெட் அருகில் விநாயகர் சிலை வைக்க சார் ஆட்சியர் அனுமதி மறுத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனத்தை சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு. இவர் திண்டிவனம் மற்றும் திண்டிவனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 26 விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் வைத்துள்ளார்.இந்நிலையில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு தலைமையிலான குழுவினர் தற்போது திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட் அருகே விநாயகர் சிலை வைக்க வேண்டி திண்டிவனம் சார் ஆட்சியரிடம் சென்று அனுமதி கேட்டார். இதற்கு சார் ஆட்சியர் அனுமதி மறுத்து விட்டார். இதற்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் பிரபு விநாயகர் சிலை வைப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் திண்டிவனம் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீசார் நேரு வீதியில்  குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Tags:    

Similar News