குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை

கடவபாக்கம் ஊராட்சிக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.;

Update: 2021-08-04 17:16 GMT

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது கடவம்பாக்கம் கிராமம். இங்கு பல நாட்களாகவே  குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் இருந்து வருகிறது.

இதனை சரிசெய்ய சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுக்க, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில், இன்று குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News