திண்டிவனத்தில் காலை சிற்றுண்டி சமையல் இடத்தை பார்வையிட்டார் ஆட்சியர்

திண்டிவனம் நகராட்சி பகுதியில் செயல்படுத்தவுள்ள காலை சிற்றுண்டி சமையல் கூடத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;

Update: 2022-09-14 10:12 GMT

திண்டிவனம் நகராட்சியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி சமையல் இடத்தை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, காலை சிற்றுண்டி தயாரிப்பதற்கான சமையலறை கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் த.மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி. அமித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News