விழுப்புரம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குசாவடிகளில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை மாவட்ட கலெக்டர் த.மோகன் நேரில் ஆய்வு செய்தார்.
திண்டிவனத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சியின் நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள, திண்டிவனம் புனித அன்னாள் மழலையர் பள்ளியில் (ST Ann's Nursery & Primary School) உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான த.மோகன் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா,திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.