புதுச்சேரியில் திருடப்பட்ட கார் மரக்காணம் அருகே கண்டுபிடிப்பு

புதுச்சேரியில் திருடப்பட்ட காரை மரக்காணம் போலீஸார் கண்டுபிடித்து புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்

Update: 2022-08-24 14:45 GMT

மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழங்காடு கிராமம் அருகே உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர் ஜீவரத்தினம் அகியோர் காரை மடக்கி பிடித்தனர்

புதுச்சேரியில் திருடப்பட்ட கார் மரக்காணம் அருகே கண்டுபிடிப்பு

பாண்டிச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த PY 01 CB 0008 என்ற பதிவெண் கொண்ட எட்டியாஸ் காரை யாரோ மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக கிடைக்கப்பெற்ற வான் செய்தியின் மூலம்கோட்டகுப்பம் உட்கொட்ட பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு PY 01 CB 0008 பதிவு எண் கொண்ட காரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாழங்காடு கிராமம் அருகே உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் காவலர் ஜீவரத்தினம் அகியோர் காரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் கேரளா மாநிலம்,குருவாயூர் மாவட்டம்,எரிக்கும் கிராமத்தைச் சேர்ந்த ரபிக் மகன் முகமது அஸ்ஸாம் என்பது தெரியவந்தது.உடனடியாக முகமது அஸ்ஸாம் மற்றும் கடத்திய காரையும் பாண்டிச்சேரி காவல்துறையினரிடம் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் சிறப்பு உதவி ஆய்வாளர் தன முருகன் மற்றும் காவலர் ஜீவரத்தினம் ஆகியோர் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News