திண்டிவனத்தில் அரிசி ஆலையில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்
Ration News -திண்டிவனம் அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கிய அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பைல் படம்.
Ration News -விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் திருவள்ளுவர் பகுதியில் உள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக விழுப்புரம் மாவட்ட திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா, தலைமை காவலர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு 3 டன் 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர் ரப்பேர்ட் பாஷா (வயது 62) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2