திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தரமதிப்பீட்டு குழு ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் மத்திய அரசின் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

Update: 2022-09-22 14:35 GMT

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் மனிஷ் பிரியதர்ஷி, சுரேந்திரநாத் ஆன்ட்டி, பெடி சிட்டி கிரேந்தி ஆகியோரை கொண்ட மத்திய அரசின் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய கட்டிட பணிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது திண்டிவனம் ஆஸ்பத்திரியின் தலைமை மருத்துவர் சாந்தகுமாரி மற்றும் டாக்டர்கள் வளவன், முரளி ஸ்ரீ சீனிவாசன், சுரேஷ்குமார், ராஜசேகர், இளங்கோ மற்றும் செவிலியர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வு 3 நாட்கள் நடைபெற உள்ளதாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News