அரசு கல் குவாரி அமைப்பது குறித்து கலெக்டர் மக்களுடன் ஆலோசனை

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் பகுதியில் கல் குவாரி அமைப்பது குறித்து கிராம மக்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்;

Update: 2021-11-28 12:38 GMT

குவாரி அமைப்பது குறித்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்

திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் வட்டம், நல்முக்கல் மற்றும் சொக்கத்தாங்கல் கிராமத்தில் சாதாரண கல் மற்றும் கிராவல் குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சிவருத்ரையா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிச்சாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News