மக்கள் தொடர்பு முகாமில் 407 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

Providing welfare assistance to 407 beneficiaries in the public relations camp;

Update: 2022-06-29 14:30 GMT

 மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், (29.06.2022) புதன்கிழமை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்பைத்துறையிர் மூலம், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் முன்னிலையில்,  அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமை  வகித்து பேசியதாவது:  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ஓராண்டு காலத்தில் 30,000-க்கும் மேற்பட்டோருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் நமது மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு மகளிர் கயஉதவிக்குழுக்களுக்கு மானிய திட்டத்தில் அதிகளவில் கடனுதவி வழங்கிட உத்தரவிட்டதின் அடிப்படையில், மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்கள் சிறு குறு தொழில்கள் தாங்களாவே சுயமாக மேற்கொண்டு அதன் மூலம் தயார் செய்யப்பட்டு வரும் பொருட்கள் அடங்கிய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை வருகைபுரிந்துள்ள அனைவரும் பார்வையிட்டு, சிறப்பான முறையில் பயன்படுத்தி தங்களுடைய வாழ்க்கை தரத்தையும், வாழ்வாதாரத் தையும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து 120 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய தீர்வு வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில், பட்டா (உட்பிரிவு) 41 நபர்களுக்கும், பட்டா (முழுபுலம்) 30 நபர்களுக்கும், பட்டா நகல் 10 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ், 115 நபர்களுக்கு ரூ.14,16,500/- இலட்சம் மதிப்பீட்டில் அரசுநலத்திட்ட உதவிகளும், குடும்ப அட்டை 40 நபர்களுக்கும், மருத்துவ காப்பீடு அட்டை 88 நபர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம், 04 நபர்களுக்கு ரூ.19,484/- மதிப்பீட்டில் சலவைப்பெட்டியினையும், வேளாண்துறை மூலம், 10 நபர்களுக்கு ரூ.12,750/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், தோட்டக்கலைத்துறை மூலம், 12 நபர்களுக்கு ரூ.11,270/-மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சித்துறை மூலம், 29 நபர்களுக்கு ரூ.8,041,410/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளும், ஊரக வளர்ச்சித்துறை மூலம் 18 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.10,025,00/- மதிப்பீட்டில் கடனுதவியும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம், 10 பயனாளிகளுக்கு ரூ.2,000 மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகம் என மொத்தம் 407 பயனாளிகளுக்கு ரூ.19,528,414/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் தகாஞ்சனா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ரமணன், மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், மரக்காணம் ஒன்றிய குழு துணைத் தலைவர் பழனி, கீழ்புத்துப்பட்டு ஊராட்சி தலைவர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News