திண்டிவனம் அருகே வழிப்பறி ஈடுபட்டவரை கைது செய்த போலீசார்

திண்டிவனம் அருகே கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் இருந்த செல்போன், ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.;

Update: 2022-09-15 01:45 GMT

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (வயது 47). இவர் சொந்தமாக சவுண்டு சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தீவனூர் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ராஜியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணம், செல்போனை பறித்து சென்றது தீவனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27) என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News