திண்டிவனம் பகுதியில் முககவசம் அணியாவிட்டால் அபராதம்

Penalty for not wearing a mask in Tindivanam area

Update: 2022-06-28 13:00 GMT

திண்டிவனம் நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் என எச்சரித்த நகராட்சி நிர்வாகம் 

திண்டிவனம் நகராட்சி பகுதியில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் ஆணையர் எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தவும், கட்டாய முகக் கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், உரிய காலங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், கொரோனா வழிகாட்டி விதிமுறைகளின்படி சமூக இடைவெளி கடைபிடித்து, கைகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுரை வழங்கி வருகிறார்.

அதனடிப்படையில் திண்டிவனம் பல்வேறு பகுதியில் முக கவசம் அணிவதை வலியுறுத்தியும் தடுப்பூசிகள் செலுத்தித்துக்கொள்ளவும், கொரோனா விதிமுறைகளின் விதியை மீறாமல் கடைபிடிக்கவும், பொதுமக்கள் குழுக்களாக கூடுவதை தவிர்க்கவும், பொதுநிகழ்ச்சிகள், சுபகாரியங்களில் கலந்துகொள்வோர் கண்டிப்பாக ஒரு வழி காட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது, பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முககவசம் அணியவேண்டும். மீறுவோர் மீது பொது சுகாதார சட்டத்தின் படி நடவடிக்கைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என திண்டிவனம் நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்தார்.

Tags:    

Similar News