திண்டிவனம் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ உதவி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ நிவாரண உதவிகளை வழங்கினர்.;
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ அர்ஜுனன்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூர் பகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு பள்ளி, சமுதாயக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அவர்களுக்கு அரிசி, காய்கறி, பெட்ஷீட், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் அதிமுக ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் கிளை கழக செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.