முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா: அமைச்சர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்
வருகின்ற 26 ந்தேதி அன்று விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் பகுதியில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழா நடைபெறவுள்ளது.
விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் த.மோகன்,இ. மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.