கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி: அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரண நிதியை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுதாரக்கு ரூ.50,000 ஆயிரம் நிவாரண நிதியினை அமைச்சர் செஞ்சி .மஸ்தான் (11.12.2021) சனிக்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், மயிலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.