திண்டிவனம் ராஜாங்குளத்தை அமைச்சர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ராஜாங்குளத்தை அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.

Update: 2021-11-01 16:55 GMT

திண்டிவனம் நகராட்சி பகுதியில் உள்ள ராஜாங்குளத்திற்கு செல்லும் நீர் வழிபாதை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதால், அதனை சரிசெய்ய வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பார்வையிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக சரி செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நகராட்சி அதிகாரிகள் தற்போது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News