திண்டிவனத்தில் தடுப்பூசி முகாமை அமைச்சர் தொடங்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
முகாமில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.பொற்கொடி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்..