திண்டிவனம் மின் வாரியத்தில் கருணை பணி அமைச்சர் மஸ்தான் வழங்கினார்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மின் பகிர்மான கழகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மஸ்தான் இன்று வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற் பொறியாளர் அலுவலகத்தில் விழுப்புரம் மின்பகிர்மான கழகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் மூன்று வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இன்று (12.11.2021) வழங்கினார்.
அப்போது மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச.சிவக்குமார், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்குப்தா, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், விழுப்புரம் மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மண்டல தலைமை பொறியாளர் பொட்ரான்ட் ரஸ்ஸல், மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி. செயற்பொறியாளர்கள் மதனகோபால் (விழுப்புரம்),சதாசிவம் (திண்டிவனம்), சித்ரா (செஞ்சி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.