உலக ஆதிவாசிகள் தின கொண்டாட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு
திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையில் நடைபெற்ற ஆதிவாசிகள் தின கொண்டாட்டத்தில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார்;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் ஒன்றியம், வெள்ளிமேடுபேட்டையில் நடைபெற்ற ஆதிவாசிகள் தின கொண்டாட்டத்தில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்,
பின்னர் தமிழக பழங்குடிகளும், அரசு திட்டங்களும் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.