தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் மஸ்தான் வரவேற்பு

திண்டிவனம் அருகே உள்ள சுங்க சாவடியில் முதலமைச்சர் ஸ்டாலினை அமைச்சர் மஸ்தான் வரவேற்றார்.;

Update: 2022-07-08 15:30 GMT

திண்டிவனம் சுங்கச்சாவடி அருகே வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் சுங்கச்சாவடியில் தமிழக முதல் ஸ்டாலினுக்கு அமைச்சர் மஸ்தான் வரவேற்பு அளித்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க சென்னையில் இருந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை சாலையில் திண்டிவனம் செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடியில் இன்று சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவருக்கு புத்தகம் வழங்கி மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தார்.  அப்போது சாலையின் இரு பக்கங்களும் 100க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், பொதுமக்கள் வழிநெடுக்கிலும் கோஷங்களை எழுப்பியவாறு அவருக்கு வரவேற்பு அளித்து வாழ்த்து தெரிவித்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு மற்றும் தொண்டர்களுக்கு கையாசைத்தவாறு காரில் மெதுவாக பயணம் செய்து சென்றார்.

Tags:    

Similar News