திண்டிவனத்தில் கொரானா நிதி வழங்கிய அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கொரானா நிதி வழங்கினார்.;

Update: 2021-05-15 12:08 GMT

திண்டிவனத்தில் அமைச்சர் மஸ்தான் பொதுமக்களுக்கு கொரோனா நிதி வழங்கினார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முதல் தவணையாக இன்று ரூ.2ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. ஆங்காங்கே அமைச்சர்கள் இதனை வழங்கி தொடங்கி வைத்து வருகின்றனர்.

அதன்படி, திண்டிவனத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் கடை எண் 4 ல் நடைபெற்ற கொரானா நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கி தொடங்கி வைத்தார், அப்போது மாவட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News