இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலர்கள் காவல் நிலையத்தில் தஞ்சம்

Instagram Lovers- இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.;

Update: 2022-09-27 02:25 GMT

செஞ்சி காவல் நிலையம் பைல் படம்.

Instagram Lovers- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,ரோஷனை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் யாகத் பாஷா (வயது 25). இவரும், செஞ்சியை அடுத்த அஞ்சேரி சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் பிரியதர்ஷினி (22) யும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர்.இருவரும்  யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டனர். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என பிரியதர்ஷியின் தந்தை ஜெயராம் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர். இதை அறிந்த யாகத் பாஷா பிரியதர்ஷினி இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை விசாரித்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செஞ்சி போலீசார் அவர்களை விசாரித்து விசாரணைக்கு பிறகு 2 பேரையும் யாகத் பாஷா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News