தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

,திண்டிவனம் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலைய பகுதியில் கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவரிம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு;

Update: 2022-07-26 16:30 GMT

 தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைவருக்கு பாராட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளிமேடுபேட்டை பகுதியில் கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அந்த பணத்தை உரியவரிடமே ஒப்படைத்தனர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்திற்குட்பட்ட கரும்பாக்கம் கிராமத்தைச் சார்ந்த சீனிவாசன் மனைவி காஞ்சனா(48) என்பவர், வெள்ளிமேடுபேட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் லோன் பணம் செலுத்துவதற்காக இந்தியன் பேங்க் வந்து பணத்தை செலுத்தி விட்டு, மீண்டும் அங்கிருந்து கருவம்பாக்கத்தில் உள்ள பவுடா வங்கிக்கு ரூ. 51 ஆயிரம் லோன் பணம் செலுத்த செல்லும்போது, அந்த பணத்தை வெள்ளிமேடுபேட்டை இந்தியன் பேங்க் எதிரில் பணம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை தவறவிட்டுள்ளதாக தெரிகிறது,

இந்நிலையில் அங்கு கீழே கிடந்த பணத்தை அந்த வழியாக வந்ததிண்டிவனம் வட்டம்,செம்பாக்கம் மதுரா மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன்மணவாளன் என்பவர் எடுத்து அங்குள்ள நபர்களிடம் விசாரித்தார், அங்கிருந்தவர்கள் தங்களோடு இல்லை என்று கூறியதாக தெரிகிறது, இதனை தொடர்ந்து அவர் வெள்ளிமேடு பேட்டை காவல் நிலையம் சென்று ஒப்படைத்தார்.

உடனடியாக விசாரணை செய்த காவல் நிலைய போலீசார் பணத்தை தவற விட்டவர் கரும்பாக்கம் காஞ்சனா தான் என்பது தெரியவந்தது,அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சிறப்பு உதவி ஆய்வாளர் அருள்தாஸ் முன்னிலையில் பணத்தை கண்டெடுத்த மணவாளன் மூலமாக காஞ்சனாவிடம் ரூ.51 ஆயிரம் மற்றும் ஆதார் அட்டை ஒப்படைத்தார்.பணத்தை பெற்ற காஞ்சனா அனைவருக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார், பணத்தை எடுத்து கொடுத்த மணவாளனை வெள்ளிமேடுபேட்டை காவல் நிலைய போலீசார் பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News