திண்டிவனத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றது.

Update: 2022-06-27 12:07 GMT

திண்டிவனத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திண்டிவனம் பகுதி மாநாடு கடந்த 26-ந்தேதி திண்டிவனம் இளமதி மஹாலில் சிறப்பாக நடைப்பெற்றது. சங்கத்தின் பகுதி தலைவர் ஐ.முருகன் தலைமை தாங்கினார், மாநாட்டில் முன்னதாக சங்கத்தின் துணை செயலாளர் ஏ.ம.சத்தீஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ் மாநாட்டை துவங்கி வைத்து பேசினார். பகுதி செயலாளர் எஸ்.பார்திபன் வேலையறிக்கையை சமர்பித்து பேசினார்.

மாநாட்டில் தலைவராக எஸ்.பார்திபன், செயலாளராக ஏ.ம.சத்தீஷ்குமார், பொருளாளராக ர.பாரதிதாசன் துணை தலைவர்களாக கே.தமிழ்ச்செல்வன், கா.சச்சின், துணை செயலாளர்களாக ஐ.முருகன், ரா.அசோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் திண்டிவனம் மேம்பாலத்தை கடக்க நகரும் மின்படிகட்டு (எஸ்குலேட்டர்) அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு இரயில்களும் நின்று செல்ல வேண்டும்.பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம் - நகரி,திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய இரயில் பாதை திட்டத்தை விரைந்து அமைக்க வேண்டும்.

விழுப்புரம் - செங்கல்பட்டு இடையே புதிய மின்சார இரயில் திட்டத்தை துவக்க வேண்டும்.திண்டிவனம் நேஷனல் பள்ளி அருகில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான கடையை மூடவேண்டும்.உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்,

மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சே.அறிவழகன் கலந்து கொண்டு நிறைவு நிறைவுரையாற்றினார்.

Tags:    

Similar News