வசூல் வேட்டையில் மருத்துவதுறையினர்
திண்டிவனத்தில் தினந்தோறும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வரும் சுகாதார துறையினரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் சலவாதி- கல்லூரி சாலை சந்திப்பில் சுகாதாரத்துறையை சேர்ந்த தினேஷ்ராஜா தலைமையில் தினசரி காலை ஏழு மணிக்கு வரும் நான்கு பேர் கொண்ட குழு இரவு ஏழு மணி வரை அபராதம் என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர்.
500/2000/5000 என வசூலில் ஈடுபடும் இவர்கள் ரூபாய் 200க்கு ரசீது போட்டால் ஐநூறு ரூபாயும் 2000 ரூபாய் ரசீது போட்டால் 5000 ரூபாயும் வசூலிக்கின்றனர்,
தினசரி இரண்டு லட்சம் வரை வசூலிக்கும் இவர்கள் வசூல் தொகையை அரசுக்கு முறையாக செலுத்துகின்றனரா என்பதை தணிக்கை செய்யவும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.