போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-20 11:30 GMT

பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் பிடித்தம் செய்தல்,விடுப்பு விதிகளை மாற்றுவது,மாத இறுதியில் சம்பளம் வழங்காதது உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து திண்டிவனம் போக்குவரத்து பணிமனையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொமுச மண்டல துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார், ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மண்டல தலைவர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் காளிதாஸ், ராஜாராம், அருள்சேகர், ரஜினி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags:    

Similar News