கார் டயர் வெடித்த விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கார் டயர் வெடித்து விபத்து 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்;
திண்டிவனம் அருகே டயர் வெடித்து நேரிட்ட விபத்தில் சிக்கிய கார்
திண்டிவனம் அருகே காரின் டயர் வெடித்து நேரிட்ட விபத்தால் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அடுத்த சாரம் அருகே வந்தபோது காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.விபத்து பற்றிய தகவல் அறிந்து ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்தவிபத்தில் காயம் அடைந்தவர்கள் மதுரையை சேர்ந்த யஷ்வந்த் ஜெகநாத்(19), இவரது நண்பர்கள் மிருதுராஜ்(18), சத்யபிரபு(18), மனாசே(18), தருண்குமார்(20) என்பதும், சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் இவர்கள் கொரோனா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர்கள் வருகிற புதன்கிழமை கல்லூரி திறக்க இருப்பதால் 5 பேரும் மதுரையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னைக்கு வரும் வழியில் விபத்து நடந்ததும், இதில் சத்தியபாபு காயம் இன்றி தப்பியதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.