முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கைது வதந்தியால் பரபரப்பு
தின்டிவனத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டு, எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
அரசு ஒப்பந்தாரர் தற்கொலை வழக்கு, கனிமவளத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு, சிறைத்துறையில் பல கோடி ரூபாய் முறைகேடு, போலீசார் குறித்து அவதூறாக பேசியது, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மீது அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை தயாராகி வருவதாக தகவல் அரசல் புரசலாக மாவட்டம் முழுவதும் தற்போது பேசப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஏடிஎஸ்பி ஒருவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்து வருகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் எப்பொழுதும் வேண்டுமானாலும் சி.வி.சண்முகம் கைது செய்யப்படலாம் என்பதால் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் திண்டிவனத்தில் உள்ள சி.வி.சண்முகம் வீடு உள்ள பகுதிகளில் குவிந்து வருகின்றன. இதனால் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.