திண்டிவனம் அருகே கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுனர் பலி

திண்டிவனம் அருகே கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் பலியானார்.;

Update: 2022-09-06 12:23 GMT

கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து நண்பர்கள் எட்டு பேர் ஒரு காரில் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அந்த காரை கோலார் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 21) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை திண்டிவனம் வழியாக புதுவை நோக்கி சென்றனர்.

அப்போது தென்கோரிப்பாக்கம் பகுதியில் கார் வந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் காரை ஓட்டி வந்த விஜயகுமார் காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் நிலைத்தடுமாறி சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு கட்டையில் மோதினார்.

இந்த விபத்தில் கார் டிரைவர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மற்ற நபர்களுக்கு எந்தெந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News