திண்டிவனம் நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் இயக்குநர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் இயக்குநர் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில், நகராட்சி நிர்வாகம் மூலம், மேற்கொள்ளப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் ஊராட்சிகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தில், கிராமப்பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சினாமூர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திண்டிவளம் நகராட்சியில், சாலவதி பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதையும், தீர்த்தகுளம் பகுதியில் கழிவு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், அரசு தலைமை மருத்துவமனை சாலை பகுதியில் இயந்திர துணை குழி மற்றும் கழிவு நீர் சேகரிப்பு குழாய் பதிக்கும் பணிகளையும், விநாயகா நகரில் கழிவுதூக்கி நிலையம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்ள பாதான சாக்கடை திட்டம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். எனவே. இப்பணியினை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் முடித்து நகராட்சியை தூய்மையாக பாதுகாத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி. திண்டிவனம் நகராட்சி ஆணையர் சௌந்தரராஜன்,நகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.