விழுப்புரம் அரசு ஐடிஐயில் மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை: ஆட்சியர் தகவல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு ஐடிஐயில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடிக்கவுள்ளதாக ஆட்சியர் தகவல் தெரிவித்து உள்ளார்.;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்தில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை முடிவுற்று காலியாக உள்ள இடங்களில் சேருவதற்கு 15.09.2021 வரை நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையும், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், சீருடை, மூடு காலனி, வரைபடக் கருவிகள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கு சென்று வர இலவச பயண அட்டை ஆகியவை தரப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி எண் 9380114610, 8072217350, 9789695190 மூலம் தகவல் தெரிந்துகொள்ளலாம்.
எனவே, தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களில் சேர்ந்து அரசின் உதவித் தொகையோடு தொழில் கல்வி பயில இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.