திண்டிவனத்தில் பயணி மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரயில்வே ஊழியர்

திண்டிவனம் ரயில் நிலையத்தில் சென்னைக்கு செல்ல ரயில் டிக்கெட் பயணியை தாக்கிய ரயில்வே ஊழியர் பின்னர் பயணியிடம் மன்னிப்பு கேட்டார் அதனால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-01-08 06:37 GMT

பயணியிடம் சமாதானம் செய்யும் ரயில்வே போலீசார்.

திண்டிவனத்தில் தமிழ் மொழி தெரியாததால் டிக்கெட் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதை கேள்வி கேட்ட பயணியை ரயில்வே ஊழியர் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் ரவி. இவர் திண்டிவனத்தில் இருந்து சென்னை செல்வதற்காக திண்டிவனம் ரயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் டிக்கெட் எடுக்க டிக்கெட் வழங்கும் இடத்திற்கு சென்றார். ஆனால் அங்கிருந்த ரயில்வே ஊழியர், இந்தி மொழியில் பேசினார். அவருக்கு தமிழ் தெரியவில்லை. இதனால் அவர் டிக்கெட் கொடுக்க தாமதம் ஆனது.

இதை தட்டிக்கேட்ட ரவியை, அந்த ரயில்வே ஊழியர் தாக்கினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள், ரயில்வே ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திண்டிவனம் ரயில்வே போலீசார் விரைந்து வந்து பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பயணிகளை சமாதானப்படுத்தினர்.

அப்போது, ரவியை தாக்கிய ரயில்வே ஊழியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சகபயணிகள் கூறினர். இதையடுத்து ரெயில்வே ஊழியர் மன்னிப்பு கேட்டார். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News