ஸ்டான் சுவாமி சிறைக்காவல் மரணம் தொடர்பாக சிபிஎம் திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம்
ஸ்டான் சுவாமி மரணத்துக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து திண்டிவனத்தில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பழங்குடியின மக்களின் போராளி ஸ்டான் சுவாமி சிறைக்காவல் மரணத்துக்கு காரணமான மத்திய அரசையும் ,தேசிய புலனாய்வு அமைப்பையும் கண்டித்து, மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக பழங்குடியின இருளர் கூட்டமைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திண்டிவனம் வட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டிவனம், தலைமை காவல் நிலைய மேம்பாலம் அருகே நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் டி.இராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட செயலாளர் என்.சுப்ரமணியம், மயிலம் ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், தமுஎகச காந்திராஜ், திண்டிவனம் ஏ.கோவிந்து, ஏ..கண்ணதாசன், பி.மணி, மனோகரன், ஐ.முருகன், பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.