திண்டிவனத்தில் மழைநீர் தேக்கம், கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற முடியாமல் இருப்பதை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், திண்டிவனம் நகராட்சி ஆணையர் சௌந்தர்ராஜன், வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.