முதலமைச்சர் பங்கேற்கும் விழா இடத்தை கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகின்ற 27 ந்தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருவதையொட்டி, விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகின்ற 27.10.2021 அன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே முதலியார்குப்பத்திற்கு வருகை புரிகிறார்.
அதனை முன்னிட்டு நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் த.மோகன், காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.