மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
மரக்காணத்தில் வருவாய் தீர்வாயம் நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உள்பட்ட மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் (06.06.2022) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம், 1431-ஆம் ஆண்டு பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.