மரக்காணம் அருகே பண்ணைக் குட்டை பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

Villupuram Collector - விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட மரக்காணம் அருகே வெட்டபட்டு வரும் பண்ணைக்குட்டை பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.;

Update: 2022-06-30 02:00 GMT

பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களின் வருகை பதிவு குறித்து வருகைப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு பார்த்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Villupuram Collector - விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், வன்னிப்பேர் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் வன்னிப்பேர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியினை பார்வையிட்டார். தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களின் வருகை பதிவு குறித்து வருகைப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். தகுதியான நபர்களுக்கு பணிவாய்ப்பினை வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பணியாளர்களிடம் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார், பணியினை சிறப்பான முறையில் மேற்கொண்டு தங்கள் பகுதியின் வளர்ச்சிக்கு உழைத்திட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News