திண்டிவனத்தில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு சி.ஐ.டி.யு. ஆர்ப்பாட்டம்
திண்டிவனம் அரசு போக்குவரத்துகழக பணிமனை முன்பு சி. ஐ. டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் வாயிற் கூட்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டிவனம் பணிமனை முன்பு நடைபெற்ற வேலை நிறுத்த விளக்க வாயிற் கூட்டத்திற்கு பணிமனை தலைவர் கே.அருள்சேகர் தலைமை தாங்கினார்,ஆர்ப்பாட்ட கூட்டத்தை டி.இராமதாஸ் கலந்து கொண்டு தொடங்கி வைத்து தொடக்க உரையாற்றினார்,
ஆர்ப்பாட்டத்தில் பே மேட்ரிக்ஸை அமல்படுத்தி, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதியர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், ஓய்வூதியர்கள் 80 மாதகால அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.