தமிழகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு முதல்வர்தான் பொறுப்பு: சசிகலா குற்றச்சாட்டு
தமிழகத்தில் நடக்கும் பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர்தான் பொறுப்பு;
தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளை சம்பவங்களுக்கு காவல்துறையை கையாளும் முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பு என சசிகலாநடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் முகமது ஷெரீப் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது நடைபெற்று வருகின்ற கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் காவல்துறை இலாகாவை கையில் வைத்திருக்கின்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்தான் பொறுப்பாவார்.
சென்னை மாநகர காவல்துறை அதிகாரங்கள் பிரிக்கபட்டதால், குற்றவாளிகள் ஒரு காவல் நிலையத்தில் குற்றச் சம்பவங்கள் பதியப்பட்டால், வேறு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர், நேற்று திண்டிவனத்தில் என்னை வரவேற்பதற்காக வைக்கப்பட்ட அதிமுக கட்சிக் கொடிகளை அதிமுகவின் ஒரு பிரிவினர் அப்புறப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு முழு காரணம் அந்த நேரத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சீனிபாபு என்பவர் தான்,அதிமுக விரைவில் ஒன்று சேரும் இதனை ஒன்று சேரவிடாமல் திமுக சதி செய்து வருகின்றது.அவரது தந்தையை நாம் எதிர்த்து பல ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டோம். இவரையும் நாம் எதிர்த்து அதிமுகவை ஒன்று சேர்ப்போம் என்றார்.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டதாக கூறுகிறார்கள். அங்குள்ள விவசாயிகளுக்கு விதையே கிடைக்காத நிலையில் தண்ணீரை திறந்து விட்டு என்ன பலன் . .அவர் சட்டசபையில் பெண் உறுப்பினர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை செய்ய அவர்களுக்கு சரியான இடத்தில் உரிய இடைவெளிவிட்டு இருக்கைகளை அமைத்து தர வேண்டும் .
அவர் சமூகநீதி ஆட்சி என்று கூறுகின்றார்கள். உண்மையான சமூக நீதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் இருநதது. தற்போது திமுக ஆட்சியில் சமூக நீதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். இதேபோன்று பத்திரிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சசிகலா, பாஜக சார்பில் திமுக மீது அளிக்கப்பட்டி ருக்கின்ற ஊழல் குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை உரிய விசாரணை நடத்திய பிறகே தெரியவரும் என்று சசிகலா கூறினார்.