திண்டிவனம் பொது குளத்தில் கோழி கழிவுகள்: காவல்துறை விசாரணை

திண்டிவனத்தில் உள்ள பொது குளத்தில் கோழி கழிவுகள் கொட்டியதால் அசுத்தம். விநாயகர் சிலையை கரைக்க முடியாமல் பொதுமக்கள் அவதி

Update: 2022-08-31 13:30 GMT

பைல் படம்

திண்டிவனத்தில் உள்ள பொது குளத்தில் கோழி கழிவுகளை வீசியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அய்யன்தோப்பு பகுதியில் பொதுக்குளம் ஒன்று உள்ளது. இந்த பொதுக்குளத்தை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி தினமான இன்று விநாயகர் மண் சிலைகள் வாங்கி பொதுமக்கள் பூஜை செய்வார். பின்னர் அந்த விநாயகர் மண் சிலைகளை செப்டம்பர் 1,2-ம் நாட்களில் குளங்களில் கரைப்பர். இதனால் இந்த விநாயகர் மண் சிலைகளை கரைப்பதற்காக பொதுக்குளத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர். அப்போது அக்குளத்தில் பெரிய மூட்டை ஒன்று மிதந்து வந்தது.

மேலும் அந்த மூட்டியிலிருந்து துர்நாற்றம் வீசி குளத்தை அசுத்தம் செய்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து,  ரோசனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். பின்னர்குளத்தில் மிதந்த மூட்டையை வெளியே கொண்டு வந்து பார்த்த போது அதில் கோழிக்கழிவுகள் இருந்தது தெரியவந்தது. பொதுக்குளத்தில் கோழிக்கழிவுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News