திறன் பயிற்சி முடித்த மீனவர்களுக்கு சான்றிதழ் : கலெக்டர் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் திறன் பயிற்சி முடித்த மீனவ மக்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கினார்;

Update: 2022-01-08 04:45 GMT

திறன் பயிற்சி  முடித்த மீனவர்களுக்கு  மாவட்ட ஆட்சியர் த. மோகன் சான்றிதழ்  வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட  ஆட்சியர்  அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மரக்காணம் மற்றும் வானூர் பகுதி மீனவ கிராம மக்களுக்கு  வாழ்வாதார பயிற்சியை நடத்தியது.  திறன் பயிற்சி முடித்த மீனவ கிராம மக்களுக்கு பயிற்சி சான்றிதழினை மாவட்ட கலெக்டர் த.மோகன்  வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News