திண்டிவனம் அருகே இடி தாக்கி சிறுவன் பலி
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெய்த திடீர் கனமழையில் இடி தாக்கி சிறுவன் பலி;
திண்டிவனம் அடுத்துள்ள சாலை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது மகன் அரவிந்தன் தற்பொழுது குப்பம் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று மாலை திண்டிவனம் நகரில் இடியுடன் பெய்த கடும் மழையின் காரணமாக இடி தாக்கியதில் அரவிந்தன் பரிதாபமாக பலியானார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.