செஸ் போட்டியில் சாதனை படைத்த விழுப்புரம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
Chess Competition - விழுப்புரம் மாவட்ட அளவில் நடந்த செஸ் போட்டியில் ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி. பி. எஸ். இ., மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.;
Chess Competition -விழுப்புரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டி திண்டிவனத்தில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில், ரெட்டணை கிரீன் பாரடைஸ் சி. பி. எஸ். இ., பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று, சிறந்த பள்ளிக்கான விருதைப் பெற்றனர். விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, பள்ளி தாளாளர் சண்முகம், செயலாளர் சந்தோஷ் மற்றும் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் சண்முகம் ஆகியோர் பாராட்டினர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2