திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

Crime Punishment- திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த ஒருவரை போலீசார் கைது செய்து பொருட்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-07-30 02:41 GMT

கைது செய்யப்பட்ட வெங்கடேசன்.

Crime Punishment- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் பிரம்மதேசம் போலீசார் திண்டிவனம் அருகே உள்ள மன்னார்சாமி கோவில் பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது அங்குள்ள டீ கடையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக தகவல் சொன்னதால் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் சென்னை அசோக்நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் என்கிற கலச வெங்டேசன்(வயது 36) என்பதும் கடந்த 2021-2022-ம் ஆண்டுகளில் திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.8.75 லட்சம் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்தனர். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News