போலீசிடம் வசமாக மாட்டிய மாடு திருடர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய மாடு திருடும் கூட்டம் வசமாக போலீசிடம் சிக்கினர்;
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் ஆரிய நிவாஸ் ஓட்டல் எதிரில் வாகன தணிக்கை செய்தனர், அப்போது சந்தேகப்படும் படியாக மாடுகளை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை மறித்து விசாரணை நடத்தினர்,
விசாரணையில் அவர்கள் செஞ்சி, வானூர், சேதராப்பட்டு, விழுப்புரம், திருக்கனூர், கஞ்சனூர் ஆகிய இடங்களில் இருந்து மாடுகளை திருடிச்சென்று விற்பனை செய்பவர்கள் என்று தெரியவந்தது,
இதனையடுத்து ராஜி (எ )தமிழ் ( எ )தமிழ் ராஜ், மணிகண்டன், அஜீத் குமார், ஆனந்த பாபு, திருமூர்த்தி, அய்யனார், அங்கமுத்து ஆகியோரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.