மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் பருவ மழை குறித்த ஆய்வு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவ மழை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது

Update: 2021-11-04 15:44 GMT

பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை வழங்கவும் அமைச்சர் மஸ்தான் 

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

ஆலோசனைக்கூட்டத்தில் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ம.யோகேஸ்வரி, துணை தலைவர் ரா.புனிதா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News