செஞ்சி அருகே கிராவல் மண் திருடிய இருவர் கைது, லாரி பறிமுதல்

செஞ்சி அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்

Update: 2021-08-03 12:07 GMT

கிராவல் மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியில் கிராவல் மண் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் அங்கு டிப்பர் லாரியில் கிராவல் மண்  திருட்டில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர், மேலும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News