செஞ்சி தொகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஆலோசனை
செஞ்சி தொகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தினார்;
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மஸ்தான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.