பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை

செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2021-11-28 11:15 GMT

அருந்ததியர் பழங்குடி பெண்களுக்கான பேரவைக்கூ.ட்டம் செஞ்சியில் நடைபெற்றது 

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தாலுக்கா கமிட்டியில் அருந்ததியர் பழங்குடிபெண்களுக்கான பேரவைக்கூ.ட்டம் ஷீபா தலைமையில் நடைபெற்றது, அமலா, அகில இந்தியதுனை தலைவர் சுதா, முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாநில துனைசெயலாளர் கீதா, மாவட்ட செயளாளர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர், தொடர்ந்து 15 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது 

கூட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு இலவச வீட்டுமனைபட்டா, ஜாதி சான்றிதழ், ரேஷன்கார்டு உடனடியாக வழங்க வேண்டும், மேலும் அடிப்படைைவசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுகொடுப்பது என முடிவு செய்தனர்.

கூட்டத்தில் 450 பெண்கள் கலந்துக்கொண்டனர்

Tags:    

Similar News